Slider

  • முல்லைத்தீவுக்கு ரணில் விஜயம் செய்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் ஆர்ப்பாட்டம்

    வடக்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பதாதைகளுடன் தெருவில் இறங்கியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி முற்பட்ட காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த பத்து வருடங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்னமும் தீர்வு தராததையிட்டு அரசாங்கத்தை கண்டிப்பதுடன் நேற்று கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்க போர்குற்ற விசாரணை தேவையில்லை எல்லாவற்றையும் மறப்போம் என கூறியுள்ள நிலையில் பாதிக்கபட்ட உறவுகள் கொதித்துப்போன நிலையில் இன்று முல்லைத்தீவில் தெருவில் இறங்கியுள்ளனர்..

    16-02-2019