மரண அறிவித்தல்

 • அமரர் குமாரவேலு தனபாலசிங்கம் அவர்களின் 8 ஆண்டு நினைவஞ்சலி

  எட்டு ஆண்டு நினைவு அஞ்சலி   ‎13-05-2017

  ஆண்டெட்டு ஆனாலும்
  ஆறமுடியவில்லை எம்மால்
  இப்புவியில் அப்பா உம்மை நாம்
  இழந்த துயரை ஈடு செய்ய
  முடியாமல் தவிக்கிறோம்
  இன்றுவரை இனியாரும் இல்லை

  அப்பா! எமக்கு இப் புவியில்
  எங்களுக்கு இழந்த துயர் நீக்க
  குடும்பத்தின் குலவிளக்காய்
  பாசத்தின் பிறப்பிடமாய்
  பண்பின் உறைவிடமாய்
  வாழ்வின் வழிகாட்டியாய்
  வாழ்ந்த எம் குலவிளக்கே!

  பெற்றோருக்கு  தலைமகனாய்
  தரணியிலே நீ பிறந்தாய்
  உற்றவயதில் உன் துணையை
  உன்னதமாய்க்கரம் பிடித்த நீ
  இம்மியளவும் குறையில்லா
  இனிதான வாழ்வு வாழ்ந்து
  பாரினிற்க்கு பண்பானபிள்ளைகள்
  முன்றை பெற்றுத்தந்துவிட்டு
  உற்ற துணையையும். பிள்ளைகளையும்
  பெற்றோரையும், உற்றோரையும்
  பாதியிலே  பரிதவிக்கவிட்டு
  எங்குதான் சென்றீரோ?

  உனக்காகபுலத்திலும் நிலத்திலும்
  உள்ளஉறவினர் நண்பர்கள் செலுத்திய
  அஞ்சலிகள் ஆயிரம்,!! ஆயிரம் !!
  அவை கேட்டனவோ?

  அப்பா ! உங்கள் செவிக்கு!!
  சட்டெனவே வந்தகாலன்
  சத்தங்கள் எதுவுமின்றி
  சடுதியாய் உன் உயிரை
  ஏன் தானோ?? எங்குதான்
  எப்படியோ ! எடுத்து சென்றான்
  பத்திரமாய் உங்களைப்
  பாதுகாக்கமுடியாமல்-- சத்தியமாய்
  பாவிகளாய்  இப்பாரினில் 
  பரிதவிக்கிறோம் நாம்

  ஆண்டெட்டு ஆனாலும் 
  ஆறவில்லை எம்மனது  என்றென்றும்
  உங்கள்  நினைவோடு
  வாழ்ந்து கொண்டிருக்கிற
  உங்கள்
  அன்புமனைவி, பெற்றோர், பிள்ளைகள்,
  மருமக்கள், சகோதர சகோதரிகள்
  பேரப்பிள்ளைகள், மைத்துனர்கள்,
  மைத்துனிகள், உறவினர் நண்பர்கள்

  13-05-2017