ஈழம்

 • மன்னார் மனித புதைகுழி கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்

   

  மன்னார் மனித புதைகுழியின் மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

   

  இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த புதன்கிழமை பரிசோதனை அறிக்கை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டபோதும் வெளியிடப்படவில்லை. எனினும் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்க தற்போது கால அவகாசம் கோரியுள்ளனர்.

   

  இந்த நிலையில் குறித்த மனித புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் வெளிவந்தவாறே உள்ளன. மனித எச்சங்களின் பரிசோதனை தொடர்பாக காலம் தாழ்த்தாது உரிய பதில் கூற வேண்டும். காலம் கடந்து செல்கின்றபோது மளுங்கடிக்கப்படும் நிலை ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

   

   

   

  23-02-2019