ஈழம்

 • மட்டக்களப்பில் பயங்கரவாத சட்டங்களை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் போராட்டம்

  பயங்கரவாத தடைச்சட்டம்,  எதிப்பு சட்டங்களை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் இலங்கையரசாங்கத்தினால் எழுத்து மூலமாக செயல் வடிவிற்கு வந்து பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலமாக யுத்த காலங்களில் வட கிழக்கு பகுதிகளில் மட்டும் அல்லாது தென்பகுதியிலும் இச்சட்டத்தின் மூலமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

  நடைபெற்றுவந்த 30 வருட கால யுத்தத்தின் இறுதி கால பகுதிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இச்சட்டத்தின் மூலமாக அரசியல் கைதிகளாகவும் முன்னாள் போராளிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

  இச்சட்டத்தை மாற்றும் வழியில் தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது முன்பு பிறப்பிக்கப்பட்டிருந்த சட்டத்திலும் வேறுபட்ட விதிமுறைகளில் மாற்றாக அமைகின்றது இவ்வாறான சட்டங்களை மாற்றும் வரையில் அதனை எதிர்ப்போம் என கூறு இன்று 22 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக மாவட்ட சிவில் சமுகம் இணையம் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் சர்வமத ஒன்றியம் என பல்வேறு அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  இப்போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மத குருமார்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு PAT , CTA சட்டங்களை எதிர்ப்போம், பா.உறுப்பினர்களே நாட்டின் பாதுகாப்பு என்ற பேரில் ஜனநாயகத்தை விற்க வேண்டாம், இராணுவ அரசு எமக்கு வேண்டாம், PAT பயங்கரவாத தடைச்சட்டம் , CTA பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் ஜனநாயகத்திற்கு ஒரு சாவுமணி என பல்வேறு பதாதைகள் மூலமாக அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


  22-02-2019